அமெரிக்காவின் அலபாமா பகுதியை சேர்ந்த ஆசிரியை ஹாரீஸ். இவர் ஆங்கிலம் கற்பிப்பதற்காக சீனாவின் ஷென்யாங் நகருக்கு சென்றிருந்தார். அங்கு ஒரு நாள் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்திருந்த போது லியு என்ற உணவு வினியோக நிறுவன ஊழியர் நூடுல்ஸ் ஆர்டரை வினியோகம் செய்ய ஹாரீஸ் வீட்டிற்கு சென்றார். இருவரும் முதல் முறையாக சந்தித்த போது லியு ஆங்கிலத்தில் பேச முயன்றார்.
அப்போது அவர், 'ஹலோ ஐ லவ் யூ' என்று தவறுதலாக கூறினார். இதை கேட்ட ஹாரீஸ் சிரித்துவிட்டார். தொடர்ந்து அவர்கள் உரையாடினர். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி ஒருவருக்கொருவர் மொழியை கற்க உதவினர். இந்த உரையாடல் அவர்களுக்கிடையே காதலை மலர செய்தது. இருவரும் தொடர்ந்து பேசிய போது அவர்களின் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருந்தது. அவர்களின் உறவை மேலும் ஆழப்படுத்தியது.
தொடர்ந்து காதல் மலர்ந்த 5 மாதங்களிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் கதை சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த காதல் சினிமா பாணியில் இருப்பதாக பதிவிட்டனர்.


