TamilsGuide

துசித ஹல்லொலுவவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு, பிரதிவாதி சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளைப் பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் துசித ஹல்லோலுவவை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment