தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
அந்த வரிசையில், மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற 'ரன்' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்து வெளியான படம் 'ரன்'. காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு 'ரன்' திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் விரைவில் வெளியாகும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.


