TamilsGuide

மானை வேட்டையாடிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது

வில்பத்து தேசிய பூங்காவில் நேற்று (28) கர்ப்பம் தரிந்திருந்த புள்ளி மானை வேட்டையாடிய குற்றச்சாட்டில் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகஸ்தெனிய பகுதியில் ரோந்து சென்ற வில்பத்டு தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகளால் இவர்கள் கைதுகள் செய்யப்பட்டன.

கைதின் போது, வனவிலங்கு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து நபர் ஒருவர், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கைதின் போது சந்தேக நபர்களிடமிருந்து 12 போர் துப்பாக்கி, வெடிமருந்துகள், ஒரு கத்தி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு மின்சார டொர்ச் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குறித்த மான் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை நொச்சியாகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

Leave a comment

Comment