TamilsGuide

இதற்கு தனுஷ் தான் காரணம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறிய தகவல் 

நடிகர் தனுஷ் பல திறமையுள்ளவர்களை சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார். வெற்றிமாறன், அனிருத் போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இதில் இசையமைப்பாளராக தற்போது இந்தியாவை கலக்கிக்கொண்டிருக்கும் அனிருத், தனுஷின் உறவினரும் கூட.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 3 திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதை தொடர்ந்து விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஹிட் கொடுத்தார்.

மேலும் தற்போது ரஜினிகாந்த் முதல் ஷாருக்கான் வரை இவர் இசையமைக்காத முன்னணி நட்சத்திரமே இல்லை. இந்த நிலையில், அனிருத் இன்று உலகளவில் புகழ்பெற்று இருக்க காரணம் தனுஷ்தான் என கூறி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, "அனிருத்துக்கு திறமை இருக்கு, அவரை வெச்சு பண்ணலாம்னு சொன்னது தனுஷ் தான். அவர் சினிமா துறைல வாரத்துக்கு முழுக்க முழுக்க காரணம் தனுஷ். அவங்க அப்பா அம்மா அநிருத்த அமெரிக்கால படிக்க வைக்கணும்னு சொல்லும்போது, இல்ல அவனுக்கு திறமை இருக்கு, என்ன நம்புங்க சொல்லி, கீபோர்டு வாங்கி குடுத்ததுல இருந்து, 3 படத்துல பண்ண வெச்சது வரையும் தனுஷ்தான்" என்றார்.
 

Leave a comment

Comment