அதில் ஒரு காட்சி:
கௌதமியிடம் பேசும்போது, நம்ம ஊருல எவண்டா ஹோட்டலுல சாப்பிடுறான், அவுக சொல்றாகல அத கேட்டா குறைஞ்சு போயிடுவிகளா என கமலிடம் கோபப்படுவது என்று பல காட்சிகளில் எதார்த்தமான சிவாஜி கணேசனே எட்டி பார்ப்பார்,.
தேவர் மகன் படத்தில் முக்கியமான காட்சிகளில் ஒன்று பஞ்சாயத்து சீன். அந்த சீனுக்காக ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் சொன்னதும் சிவாஜி ஸ்க்ரிப்ட்டில் இருந்தபடி நடித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
நாசரால் பஞ்சாயத்தில் சலசலப்பு எழும்போது கோபமாக சிவாஜி கணேசன் வந்து காரில் ஏற வேண்டும். அதுதான் கமல் ஹாசனும், பரதனும் யோசித்து வைத்திருந்த சீன். ஆனால் சிவாஜியோ அந்த கோபத்தோடு வந்து காரின் கதவை ஓங்கி சாத்திவிட்டு கார் ஒன்னுதான் குறைச்சல் என சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்துவிடுவார்.
டேக்கில் காரின் கதவை சாத்திவிட்டு சிவாஜி சென்றதும் என்ன செய்வதென்று தெரியாத கமல் கொஞ்ச தூரம் நடந்து போன பிறகு இது ஸ்க்ரிப்ட்டில் இல்லை நீங்கள் காரில் ஏறுவது தான் ஸ்க்ரிப்ட்டில் இருக்கிறது என்றிருக்கிறார். அதற்கு சிவாஜியோ; கமலா (கமலை சிவாஜி அப்படித்தான் அழைப்பார்) ஒருவன் அசிங்கப்பட்டு உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும்போது மானமே போச்சு கார் ஒன்னுதான் குறைச்சலா என்ற எண்ணம்தான் அவனுக்கு தோன்றும். அதைத்தான் செய்திருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். சிவாஜி சொன்னது சரி என கமலுக்கு பட அந்த சீனையே ஓகே செய்து படத்தில் வைத்திருக்கிறார்
அதேபோல் சிவாஜி இறக்கும்போது வடிவேலுவும், சங்கிலி முருகனும் ரொம்பவே அழுதுகொண்டிருக்க அவர்களை அதட்டி, கமல்தாண்டா எனக்கு புள்ள. என்னமோ நீங்க எனக்கு புள்ளை மாதிரி இந்த கதறு கதறுறீங்க. சத்தம் வராம நடிக்கணும் என சொல்லியிருக்கிறார். இப்படி சிவாஜி கணேசன் தனது நடிப்பில் மட்டுமின்றி பிறரின் நடிப்பிலும் எதார்த்தத்தை தேடியவர். அந்த மகா நடிகனை பெருமையோடு நினைக்க வைக்கிறது.
Prashantha Kumar


