TamilsGuide

அரசாங்கம் சரியில்லை என்றால் ஐந்து ஆண்டுகளில் விரட்டுங்கள்

அரசாங்கம் சரியில்லை என்றால் ஐந்து ஆண்டுகளில் தங்களை விரட்டுமாறு வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்த அவர் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே இந்த நாட்டில் உருவான சிறந்த அரசாங்கம் எனவும்   குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு உச்ச அளவில் சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளின் பின்னர் இந்த அரசாங்கம் சரியான பாதையில் செல்லவில்லை என மக்கள் தீா்மானித்தால் ஜனநாயக ரீதியான முறையில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும் எனவும் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment