விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்கவை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று அவரது வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்கமைய 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியிலான இரு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வெளிநாட்டுத் தடை விதித்து நீதிமன்றம் பிணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு சிறைச்சாலை சுகாதார சேவை பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய போது இலஞ்சம் பெற்ற ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


