TamilsGuide

ஹரினுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (26) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பதுளை நீதிவான் நுஜித் டி சில்வா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

2024 நவம்பர் 11 அன்று பதுளையில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.
 

Leave a comment

Comment