TamilsGuide

தயாரிப்பு நிறுவனம் தொடக்க விழா- தீயாக இயங்கும் ரவி மோகன் - கமல் ஹாசன், கார்த்திக்கு பத்திரிகை

நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.

அதற்கான பணிகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 26) தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த தொடக்க விழா பணிகளை ரவி மோகன் உடன் இருந்து மேற்பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மிகப்பெரிய நாளுக்கான ஆயத்தம் என இந்த படங்களை ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த விழாவுக்கு நடிகர் கார்த்தியை நேரில் சென்று ரவி மோகன் அழைத்த வீடியோவும் வெளியாகி உள்ளது. 
 

Leave a comment

Comment