TamilsGuide

ரணில் விக்கிரமசிங்க கைது - நோர்வே முன்னாள் தூதுவர் அதிருப்தி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமைக்கு  முன்னாள் இலங்கைக்கான  நோர்வேயின்  அமைதித் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim) அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ரணில் விக்கிரமசிங்க  உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர்,   ரணிலை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் 2022ஆம் ஆண்டில் இலங்கை நாட்டை பொருளாதார மற்றும் அரசியல் குழப்பத்திலிருந்து காப்பாற்ற முன்வந்த ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை என்றும், ஐரோப்பாவில் அவை குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஊழலுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின்  நடவடிக்கைகளைத் தாம் ஆதரிப்பதாகவும், ஆனால்  உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறும் அவர்  கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment