TamilsGuide

ரணிலுக்காக நாட்டில் இடம்பெறும் விசேட பூஜைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், அவர் விரைவாக குணமடைய வேண்டுமென பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் புசல்லாவ கலுகல்ல தோட்டம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதி பொதுச் செயலாளர் எம்,எஸ்,எஸ்,செல்லமுத்து கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.செல்வமதன் பொதுமக்கள் இணைந்து வழிப்பாடுகளில் முன்னேடுத்து இருந்தனர்.

இதன்போது  ரணில் விக்கிரமசிங்க விரைவில் குணமடைய வேண்டும் என விசேட பூஜை வழவாடுகள் இடம்பெற்றிருந்தன.

இதில் தோட்ட தொழிலாளர்கள், தலைவர்கள் ,பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment