த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த மாநாட்டில் பேசிய விஜய், விஜயகாந்தை அண்ணன் என்று கூறி புகழ்ந்து பேசினார். விஜயகாந்தை விஜய் புகழ்ந்து பேசியதை விமர்சித்த சீமான், "விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது விஜய், அவர் கட்சிக்கு ஆதரவாக பேசவும், அவரை சந்திக்கவும் இல்லை; என் கருத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொல்லவில்லை. என் முகத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என்று விஜய் கூறுகிறார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் குறித்து விஜய் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, "தலைவர் விஜய்காந்த் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது விஜய் அவரை வந்து சந்திக்கவில்லை. ஆனால், இறந்த பிறகு வந்து பார்த்தார். இது பற்றி நானே அவரிடம் நேரில் கேட்பேன், உலகம் அறிந்த உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் சீமான்" என்று தெரிவித்தார்.


