TamilsGuide

தொடர்ந்தும் சிகிச்சையில் ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அவரது உடல்நிலை சற்று சீராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், நோய் நிலைமை காரணமாகச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் நேற்றையதினம் (23) , தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு 24 மணித்தியால கண்காணிப்பில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment