TamilsGuide

மதராஸி படத்தின் 2வது பாடலான வழியிறேன் வெளியானது

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இசை மற்றும் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் செகண்ட் சிங்கிளான வழியிறேன் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் எழுத அனிருத் பாடியுள்ளார்.

Leave a comment

Comment