முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கோட்டை நீதிமன்றத்தில் இன்று நடந்த பிணை தொடர்பான விசாரணைகளிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரைப் பராமரிக்க ரணில் மட்டுமே இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
மேலும் தனது கட்சிக்காரரின் பிணை மனுவை பரிசீலிக்கும்போது இந்த சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.


