TamilsGuide

ரணிலை சந்திக்க வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவு சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்றையதினம் (22) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிறைச்சாலைக்கு சென்று அவரை சந்தித்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment