TamilsGuide

இந்தியாவிற்கு ஆதரவளித்த முன்னாள் ஆலோசகருக்கு - ட்ரம்ப் செய்த செயல்

இந்தியா மீது கூடுதலாக வரி விதிப்பை கண்டித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் வீட்டில் எப்.பி.ஐ., புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகராக இருந்தவர் ஜான் போல்டன், வாஷிங்டனில் உள்ள இவரது வீடு, அலுவலகத்தில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அமைப்பின் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.

இந்த சோதனை குறித்த பின்னணியில் நடந்த விசாரணையில், அமெரிக்க அதிபர் ஒரு பகுத்தறிவற்றவர் என ஜான் போல்டன் விமர்சனம் செய்ததுடன், ஒரு இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீதம் வரை வரி விதித்து அறிவிப்பு வெளியிட்ட ஜனாதிபதி டிரம்ப்பை கண்டித்தார்.

இதன் எதிரொலியாகத்தான் அவரது வீட்டில் சோதனை நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a comment

Comment