நியூயார்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்று திரும்பிய சுற்றுலாப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 49 பேர் உயிர் தப்பினர்.
இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர்.
நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்வையிட்ட பிறகு சுற்றுலாப் பயணிகள் நியூயார்க் நகரத்திற்குத் திரும்பிச் சென்றபோது பஃபலோவிலிருந்து கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் குழந்தைகள் யாரும் உயிரிழக்கவில்லை. வேறு யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் பல பயணிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


