TamilsGuide

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

காலை வசந்த மண்டப பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார், மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் ஆலய தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

அத்தோடு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைகின்றன.

நாளைய தினம் சனிக்கிழமை மாலை முருகப் பெருமானின் திருக்கல்யாணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment