ஹம்பாந்தோட்டை சூரியவெவ, வெவேகம வனப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடான (STF) பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயங்களுக்கு உள்ளான சந்தேக நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் ஒரு பொலிஸ் விசேட படை வீரரும் காயமடைந்துள்ளார்.
அவர் சிகிச்சைக்காக சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இரண்டு சந்தேக நபர்கள் இருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டின் போது ஒரு சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலின் போது, சந்தேக நபர்கள் அதிகாரிகள் மீது ஒரு கையெறி குண்டையும் வீசியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சந்தேக நபர் கொஸ்கொடவில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


