TamilsGuide

5 ஆவது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம்

தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (22) 5 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இத்தகைய பின்னணியில், மத்திய தபால் பரிமாற்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு தொடங்கிய தபால் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.

வேலைநிறுத்தம் காரணமாக, கடந்த சில நாட்களாக தபால் அலுவலகம் மூலம் சேவைகளைப் பெற வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதேவேளை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்களில் பங்கேற்க மறுப்பதாக பணிப்பகிஷ்கரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment

Comment