TamilsGuide

மோகன்லால் வேண்டுதல் நிறைவேறியது - மீண்டு வந்த மம்மூட்டி

நடிகர் மம்மூட்டி கடந்த 7 மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். ரமலான் பண்டிகையில் இருந்தே அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ளவில்லை.

இவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என பல லட்ச ரசிகர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பராக நடிகர் மோகன்லால் சபரிமலையில் அவருக்காக அர்ச்சனை செய்திருந்தார் அச்செய்தி மிகவும் வைரலானது.

அதைத் தொடர்ந்து, அவர் உடல்நலம் குணமாகி மீண்டும் படப்பிடிப்புகளுக்கு வரவிருக்கிறார் என்ற தகவல் நேற்று முதல் இணையத்தில் பரவி வந்தது.

இதனை உறுதிபடுத்தும் வகையில் அனைவரும் மம்மூட்டியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கம் பேக், வெல்கம் பேக் என மனதார வாழ்த்துக்களை பதிவிட்டனர்.

மம்மூட்டியின் உடல்நிலை தொடர்பாகவும், சிகிச்சையின்போது எப்படியான விஷயங்களை அவர் கடந்து வந்தார் என்பது குறித்து, அவருடைய நண்பரும், நடிகரும், எழுத்தாளருமான வி.கே.ஶ்ரீராமன் பேசியிருக்கிறார்.

வி.கே.ஶ்ரீராமன், "சிகிச்சையின் ஆரம்பக் கட்டங்களில், அவர் உணவின் சுவை தெரியவில்லையெனவும், மணம் உணரும் திறனை இழந்துவிட்டதாகவும் கூறினார்.

இப்போது எல்லாம் குணமாகிவிட்டது. அவர் விரைவில் திரும்புவார்.

மம்மூட்டி அவரே தொலைப்பேசியில் அழைத்து, தான் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகக் கூறினார்.

அவரது குரலில் ஒருபோதும் பலவீனத்தின் அறிகுறி இருந்ததில்லை. அவர் பேசும்போது ஒரு நோயாளியின் குரல் போலவே இல்லை.எப்போதும் இருக்கும் அதே வலிமை, அதே ஆற்றல் இப்போதும் இருக்கிறது. அவர் என்னைத் தொடர்ந்து அழைத்துப் பேசுகிறார்." என கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment