TamilsGuide

மூதூரில் 55 ஹெக்டேர் வயல் நிலங்கள் விடுவிப்பு

மூதூர்-ரால்குழி பகுதியில் 55 ஹெக்டேர் வயல்  நிலங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர  தெரிவித்துள்ளார்.

இந்த நிலங்கள் கடந்த காலத்தில் வனத்துறையால் வரையறுக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகாரிகளால் முறையான அடையாள பொறிமுறை மேற்கொள்ளப்பட்டு தற்போது  மக்களின் வசம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்   ”இதுபோன்ற நீண்டகால பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் பிரதி அமைச்சர்  அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment