TamilsGuide

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையின் அவரை ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (20) மிரிஹானவில் உள்ள அவரது பிரத்தயேக இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டதால் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன் பினை மனுவை சமர்ப்பித்திருந்த நிலையில், அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
 

Leave a comment

Comment