TamilsGuide

கௌரவ வேஷங்களுக்கே கௌரவம் கொடுத்தவர் சிவாஜி.

ஒரு முழுப் படத்துலே நடிச்சு பேர் வாங்குறதை ஒரு சின்ன கௌரவம் வேஷம் நடிச்சு பேர் வாங்க முடியும்னு நிரூபிச்சவர் சிவாஜி.
தமிழ் சினிமாவை பெரும்பாலும் வியாபார நோக்கத்தோடதான் எடுக்கறாங்க. சரி பணம் போட்டு படம் எடுக்கறவங்க அதுலே பணம் சம்பாதிக்கறது சரிதான்.மக்களுக்காக பொழுது போக்கா இருந்தாலும் அது கூட சில நல்ல விஷயங்களையும் சேத்து படம் எடுத்தா நல்லா இருக்குமே. சிவாஜி படங்கள் எல்லாம் இந்த அடிப்படையிலே தான் எடுத்தாங்க. காசுக்கு காசு நல்ல பொழுது போக்கு அதுகூட நல்ல விஷயங்கள் கிடைச்சுதே.
ரெண்டு மணி நேரம் மூணுமணி நேரம் நடிச்சு பேர் வாங்கறத ஒரு பத்து நிமிசம் பதினைஞ்சு நிமிஷம் கெஸ்ட் ரோல் செஞ்சு கூட நல்ல பேரை வாங்க முடியும்.

நடிகர்திலகம் சிவாஜி 19 படங்கள்லே கௌரவ நடிகரா நடிச்சிருக்கார்.சிவாஜி கௌரவ வேஷத்துலே நடிச்ச முதல் படம் மர்மவீரன். 3.8.1956 லே வெளியான திரைப்படம் இது.

அடுத்து பந்துலு டைரக்சன் செஞ்ச ஸ்கூல் மாஸ்டர் கன்னட படத்தில கௌரவ நடிகரா நடிச்சார்.இந்த படம் வெளிவந்த தேதி 31.1.1958.
இந்தப் பட ஒளிப்பதிவாளர் டபிள்யூ.ஆர். சுப்பா ராவ் .
இந்த படத்துலே வர்ற ஒரு குழந்தைகள் நடன நாடகத்தை மட்டும் கேவா கலர்லே படம் பிடிச்சிருப்பாங்க.
தெலுங்கு , தமிழ் , மலையாளம்
மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செஞ்சு வெளியாச்சு.
எங்கள் குடும்பம் பெரிசுன்னு தமிழ்லே டப்பிங் செஞ்சு வெளியிட்டார் பந்துலு.இந்த படம் மைலாப்பூர் காமதேனு தியேட்டர்லே 100 நாள் ஓடுச்சு.இதுலே சரோஜாதேவியும் நடிச்சிருந்தாங்க.வாசுங்கற கேரக்டர்லே சிவாஜி நடிச்சிருப்பார்.
1959 லே சிறந்த மூணாவது சிறந்த படம்ங்கற அகில இந்திய தகுதி நற்சான்றிதழ் தேசிய விருதும் ,
அந்த ஆண்டின் சிறந்த கன்னட திரைப்படத்துக்கான தேசிய விருதையும் பெற்ற படம் இது.

7.8.959 லே சிவாஜி கௌரவ வேஷத்துலே நடிச்சு வெளியான படம் தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை. இந்த படத்தை டைரக்சன் செஞ்சவர் K.சோமு.கேவி. மகாதேவன் இசையமைப்பு.இந்தப் படத்துல நடிச்ச மத்த நடிகர்கள் மனோகர் விகே .ராமசாமி டிகே ராமச்சந்திரன் பத்மினி பண்டரிபாய் கண்ணாம்பா..
இத்திரைப்படத்தில சிவாஜி கணேசனின் நடிப்புலே 'பொற்கைப் பாண்டியன்' ங்கற ஓரங்க நாடகம் இடம்பெறும். அதுலே கௌரவ நடிகரா நடிச்சார் சிவாஜி.

14.4.1959 லே வெளியான இந்திப்படம் ஸ்கூல் மாஸ்டர்.இது முதல்லே வந்த ஸ்கூல் மாஸ்டர் கன்னட படத்தோட ரீமேக்காகும்.டைரக்சன் பந்துலு.இதுலயும் கௌரவ வேஷத்துலே நடிச்சார் சிவாஜி.

1.7.1960 லே வெளியான தெலுங்கு படம் பில்லலு தெச்சின செல்லுன ராஜ்யம்.பந்துலு டைரக்சன் பண்ணுன படம் இது. நடிகர்திலகம் கௌரவ வேஷம் பண்ணுன படம் இது.குழந்தைகளை முக்கிய
கேரக்டர்களா வெச்சு எடுத்த படம் இது.

29.7.1960 லே வெளியான படம் குழந்தைகள் கண்ட குடியரசு.
இது இதுக்கு முன்னாலே சொன்ன தெலுங்கு பட ரீமேத்தான். ஒரு வயசான விஞ்ஞானி வேஷத்துலே சிவாஜி நடிச்ச படம் இது.அந்த கேரக்டரேலே நடிச்சது சிவாஜியான்னு நம்ப முடியாத அளவுக்கு சிவாஜி செஞ்சிருப்பார்.அந்த பாடி லாங்குவேஜ் ,அந்த முக ஒப்பனை அது இல்லாமே எந்த படத்துலயும் இல்லாத அந்த வித்தியாசமான குரல் மாடுலேசன்னு அப்பவே டெக்னாலஜி குறைவா இருந்த அந்த காலகட்டத்துலேயே சிவாஜி பிரமிப்பா செஞ்சிருப்பார்.
இதே படம் கன்னடத்துலே மக்கள் ராஜ்ஜியம்னு ரீமேக் பண்ணி வெளியிட்டார் பந்துலு .5.8.1960 லே வெளியாச்சு.

3.4.1960 லே ஸ்கூல் மாஸ்டர் திரைப்படத்தை மலையாளத்துலே ரீமேக் செஞ்சு வெளியிட்டார் பந்துலு.இதுவும் சிவாஜி கௌரவ வேஷத்துலே நடிச்ச படம் தான்.

23.12.1964 லே வெளியான தெலுங்கு படம் ராம்தாஸ்.
குணச்சித்திர நடிகர் வி. நாகையா டைரக்சன் செஞ்ச படம் இது.இதுல சிவாஜி மட்டும் இல்லே,NTராமாராவ் நாகேஸ்வரராவ் அஞ்சலி தேவியும் கௌரவ வேஷத்துலே நடிச்சாங்க.NT ராமாராவும் சிவாஜியும் ராமன் லட்சுமணர் வேஷத்துலே நடிச்சாங்க.சிறந்த தெலுங்குப்படம் என்ற தேசிய விருதை வாங்குன படம் இது.

26.8.1966 லேவெளியான படம் தாயே உனக்காக.டைரக்சன் பி.புல்லைய்யா.திரைக்கதை கண்ணதாசன்.கேப்டன் ஸ்வாமிங்கற கேரக்டர்லே சிவாஜி நடிச்ச படம் இது.சிவக்குமார் SSராஜேந்திரன் முத்துராமன் பத்மினி தேவிகா விஜயகுமாரி உள்பட நிறைய நடிகர் நடிகைகள் நடிச்ச படம் இது.தேசபக்தியை மையமா வெச்சு எடுத்த படம் இது.

15.3.1973 லே வெளியான தெலுங்கு படம் பங்காரு பாபு.
நாகேஷ்வரராவ் வாணிஸ்ரீ நடிச்ச படம் இது. வசந்தமாளிகை சூட்டிங் ஸ்பாட்டுலே எடுத்த வீடியோன்னு இணையத்துலே ஒரு வீடியோ வைரலாச்சே. அது இந்த படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சி தான்.
இந்த ஒரு காட்சிலேதான் சிவாஜி நடிச்சார் இந்த படத்துக்காக.

5.7.1973 லே வெளியான தெலுங்கு படம் பக்த துகாராம்.மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியா நடிச்சார் நடிகர்திலகம்.நடிகை அஞ்சலிதேவி தயாரிச்ச படம் இது .இந்தப் படத்தில நடிச்சதுக்காக சிவாஜி பணம் எதுவும் வாங்கல .

31.1.1975 லே வெளியான திரைப்படம் சினிமா பைத்தியம். இதுல வீரன் வாஞ்சிநாதன் கேரக்டர்ல சிவாஜி நடித்திருப்பார் .ALS புரொடக்சன் தயாரிக்க இந்த படத்தை டைரக்ஷன் செஞ்சவர் முக்தா சீனிவாசன் .

12.8.977 லே வெளியான தெலுங்கு படம் ஜீவன திராலு.
இந்த படம் தமிழ்ல வாழ்க்கை அலைகள்னு பேர்ல டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது .நடிகர் திலகம் கௌரவ வேஷத்திலே நடிச்ச தெலுங்கு படம் இது .

25.8.1977 லே வெளியான இன்னொரு தெலுங்கு படம் சாணக்கிய சந்திரகுப்தா.
நடிகர் திலகம் NT.ராமராவ் நாகேஸ்வர ராவ் மூணு பேரும் நடிச்ச படம் இது.மாவீரன் அலெக்சாண்டரா சிவாஜி நடிச்ச படம் இது .இந்தப் படத்தின் கதை எழுதி தயாரிச்சவர் என்டி ராமராவ் .

12.4.1980 லே வெளியான படம் நட்சத்திரம். ஸ்ரீபிரியா கதை நாயகியாக நடிச்ச இந்தப் படத்துல நடிகர் திலகம் சிவாஜி கமலஹாசன் ரஜினிகாந்த் உள்பட எல்லோரும் கௌரவ வேதத்தில நடிச்சாங்க.

14.1.1983 லே வெளியான படம் உருவங்கள் மாறலாம் .ஒய் ஜி மகேந்திரன் கதாநாயகனாக நடித்த படம் இது. சிவாஜி ரஜினிகாந்த் கமலஹாசன் எல்லோரும் கௌரவ வேஷத்துலே நடிச்சாங்க .
கடவுள் கேரக்டர்ல சிவாஜி நடிச்சிருப்பார். கோர்ட்லே சிவாஜி வாதாடற காட்சிகள் சிறப்பா இருக்கும்.

சிவந்த மண் படத்தை ஸ்ரீதர் இந்தியில தர்த்திங்கற பேர்ல எடுத்தார் .தமிழ்ல முத்துராமன் செஞ்ச கேரக்டரை ஹிந்திலே செஞ்சார் சிவாஜி .6.2.1970 லே வெளியாச்சு இந்த படம்.

14.8.1987 லே வெளியான தெலுங்கு படம் அக்னி புத்ருடு.நாகேஷ்வரராவ் நாகார்ஜூனா நடிச்ச படம் இது .சிவாஜியோட கேரக்டர் ரொம்ப சிறப்பா இருக்கும்.கௌரவ வேஷமா இருந்தாலும் கலக்கலா இருக்கும்.

செந்தில்வேல் சிவராஜ். 
 

Leave a comment

Comment