TamilsGuide

யாழ் மாவட்டத்தில் அனுமதியற்று இயங்கி வரும் மருந்தகங்கள் தொடர்பாக இராமநாதன் அர்ச்சுனா சபையில் கேள்வி?

யாழ் மாவட்டத்தில் அனுமதி பெறாத 18 மருந்தகங்கள் இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தகவல் வெளியிட்டிருந்த போதும் தற்போதைய அரசாங்கம் ஏன் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரது கேள்விக்கு பதில் அளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ  ”பதிவு செய்யப்படாத மருந்தகங்கள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றது எனவும்,  இவற்றைத் தரப்படுத்துவதற்குரிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் ஆனால் கடந்த 10 வருடங்களாக நடைமுறையில் சட்டங்கள் இருந்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் ” தற்போது இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தாம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும்,  அனைத்து மருந்தகங்களும்  பதிவு செய்யப்படும் எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனுமதியின்றி இயங்கும் சில மருந்தகங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தரமான மருந்துகளை பெற்றுக்கொடுப்பதற்கும் ஒளடங்கள் தொடர்பான பொறுப்பினையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் எனவே ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் ஊடாகவே

மருந்துகள் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும்,  எனவே பதிவு செய்யப்பட்ட மருந்தகங்கள் ஊடாகவே மருந்துகள் விநியோகிக்கப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment