TamilsGuide

சஞ்சய் ராமசாமியாக நடித்த அஜித்... அவரால்தான் சிக்ஸ் பேக் கலாசாரமே உருவாச்சு - ஏ.ஆர்.முருகதாஸ்

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், கஜினி படத்தில் முதலில் அஜித் நடித்தது குறித்து சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ஏ.ஆர் முருகதாஸ் பகிர்ந்துள்ளார்.

நேர்காணலில் பேசிய அவர், "மிரட்டல் படம் தான் பின்னர் கஜினி என்று பெயர் மாற்றப்பட்டது. மிரட்டல் படத்திற்காக அஜித் சார் சஞ்சய் ராமசாமியாக நடித்த 2 நாள் காட்சிகள் இன்னும் என்கிட்ட இருக்கு. அதை பார்த்தால் இன்றும் பயங்கர பிரமிப்பாக இருக்கும். அஜித் சார் தான் இந்த படத்திற்கு சிக்ஸ் பேக் வைக்கலாம் என்று யோசனையை கூறினார். அப்போ சிக்ஸ் பேக் என்கிற கான்செப்ட் கிடையாது. பின்னாட்களில் சூர்யா, அமீர் கானிடம் சிக்ஸ் பேக் வைக்கச் சொன்னதும் அஜித் சாரால்தான். அதுக்குப் பிறகுதான் சிக்ஸ் பேக் என்கிற கலாசாரமே உருவாச்சு" என்று தெரிவித்தார். 
 

Leave a comment

Comment