தெகிடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அசோக் செல்வன். இதைத்தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். போர் தொழில் திரைப்படம் அசோக் செல்வனுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ப்ளூ ஸ்டார் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
அண்மையில் வெளியான தக் லைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்திருந்தார். இந்நிலையில், அசோக் செல்வனின் புதிய படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது. மணிகண்டன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார்.
வேல்ஸ் இண்டர்னேஷனல், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.


