TamilsGuide

பேலியகொடையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

பேலியகொடை, வெதமுல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தைப் பயன்படுத்தி ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (19) மாலை பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இறந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தக் கொலை நடந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.

எவ்வாறெனினும், குற்றத் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment