TamilsGuide

எயார் கனடா பணியாளர்கள் போராட்டத்தை கைவிடத் தீர்மானம்

எயார் கனடா விமான சேவையின் பணியாளர்கள் போராட்டத்தை கைவிடத் தீர்மானித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர எயார் கனடா நிறுவனமும் அதன் விமானப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமும் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

இன்றைய தினம் முதல் கிரமமான அடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடங்குவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் மத்தியஸ்தத்துடன் இரண்டு தரப்புக்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமான பயணிகள் மட்டும் விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விமான சேவையின் வழமையான பணிகள் மீண்டும் தொடர்வதற்கு சுமார் 7 முதல் பத்து நாட்கள் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment