மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மியான்மரில் வருகிற டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 28-ந்தேதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டில் பெரும்பாலான பகுதிகள் ஜனநாயக ஆதரவு போராளிகள், சிறுபான்மை கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


