தமிழர்களுக்கு மனிதாபிமான உணர்வு அதிகம்! அமெரிக்காவில் உரையாற்றிய பொன்மனச் செம்மல்
புரட்சித் தலைவர் ஒருமுறை முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றார்.
அங்கு ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருக்கும்போது வழியில் ஒரு சாலை விபத்தில் கார் சேதகமாகிக் கிடப்பதைப் பார்க்கிறார்.
உடனே தன் காரை நிறுத்தச் சொல்லி அருகே சென்று பார்க்கையில் உள்ளே ஒருவர் குற்றுயிராகக் கிடப்பதைப் பார்த்து, அந்த நபரை தன் காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நிகழ்ச்சிக்கோ நேரமாகிவிட்டது.
எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுத்தான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்றார்.
அந்த நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்ததற்கு சபையில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்துச் சொல்லி இருக்கின்றார்.!
தொடர்ந்து பேசிய புரட்சித் தலைவர், "ஒரு விபத்து நடந்துவிட்டது... யாரும் உதவிக்கு வரவில்லை... சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன..."
ஆனால்...!
"இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்களோ, நண்பர்களோ அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய மனிதாபிமானம் உள்ளவர்கள் உலகிலேயே எங்கள் தமிழ்நாட்டினர்தான்... என்று பெருமையோடு தெரிவித்துக் கொள்கின்றேன்..." என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது.
- நன்றி: எம்ஜிஆர் உலகம்
https://thaaii.com/2025/08/18/article-about-mgr-44/


