TamilsGuide

வட்டுவாகல் பாலத்தை இருவழிப் பாதையுடன் நிர்மாணிப்பதற்கு திட்டம்

பரந்தன் – கரைச்சி, முல்லைத்தீவு வீதியின் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வட்டுவாகல் பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் களப்புக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் இறுதியாக திருத்தப்பட்டுள்ள குறித்த பாலம் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்ற நிலையில் கடந்த காலத்தில் மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கம், இதனை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால், இருவழிப் பாதையுடன் கூடிய புதிய பாலமாக அதனை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக, தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறைமையின் அடிப்படையில் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment