2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்கு விண்ணப்பிக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கான நேர்காணல்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது.
முதற்கட்ட நேர்காணல்களுக்கு 47 அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இந்த ஆண்டுக்கான அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த பெப்ரவரி மாதம் கோரப்பட்டன.
இதன் போது மொத்தம் 83 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த 83 விண்ணப்பங்களில், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் 36 நிராகரிக்கப்பட்டன.
அதன்படி, மீதமுள்ள 47 விண்ணப்பங்களுக்கான முதற்கட்ட நேர்காணல்கள் தற்போது நடத்தப்படுகின்றன.
இந்த ஆரம்ப நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இரண்டாவது சுற்று நேர்காணலுக்கு அழைக்கப்படும்.
இரண்டாவது சுற்றுக்குப் பின்னர், தகுதி பெறும் கட்சிகள் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய அரசியல் கட்சிகளாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியது.
தற்போது, இலங்கையில் 86 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


