TamilsGuide

சம்மாந்துறையில் கஞ்சாவுடன் நால்வர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காகவும் நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்தையும் சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை ஊழல் தடுப்பு படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 22 முதல் 45 வயதுக்கிடைப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 350 கிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1400 மில்லிகிராம் கஞ்சாவும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1000 மில்லிகிராம் கஞ்சா மற்றும் ஒரு தொகை பணம் என்பன மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர்கள் மற்றும் பணம் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment