TamilsGuide

கோழிப்பண்ணையிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

புப்புரஸ்ஸ ரஜத்தலாவ பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

ரஜதலாவ, கேடகும்புரே கெதராவைச் சேர்ந்த அறுபது வயதுடைய அட்டும் முடியன்செலாகே டிக்கிரி பண்டா என்ற இரண்டு குழந்தைகளின் தந்தை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்தவர் குறித்த கோழிப்பண்ணையில் பணிபுரிந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபரின் மனைவி வெளிநாட்டில் வேலை செய்கின்ற நிலையில் அவரது இரண்டு பிள்ளைகளும் திருமணமாகி வேறு பகுதிகளில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இன்று காலை (19) கோழிப்பண்ணையில் பணிபுரியும் மற்றொரு நபர், கோழிப்பண்ணையில் அவர் இறந்து கிடப்பதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் கம்பளை புப்புரஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment