TamilsGuide

இம் மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 1,50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம்  நாட்டுக்கு 150,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன்  சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பங்காளர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அழகு, கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் நிறைந்த இலங்கையை பார்வையிட சகலரையும் அழைப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மேலும்  தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment