இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை தொடர்பாக தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (18) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில், இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.
முன்னாள் அமைச்சர் பல அழைப்பாணைகளுக்கு பதிலளிக்கத் தவறிவிட்டார் என்றும், அவரது பதவிக் காலத்தில் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்காமல் தவிர்த்துவிட்டார் என்றும் புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டினர்.


