நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 194.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 4- வது நாள் மட்டும் இந்தியாவில் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாயும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. உலகளவின் மொத்தம் இதுவரை 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.


