TamilsGuide

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

மகாண சபை தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்பதுடன் 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,சிவில் விமான சேவைகள அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை குறிப்பிட்டார். இதேவேளை நாட்டில் இடம்பெற்றுவரும் துப்பாக்கிச்சூடு, வாள்வெட்டு சம்பவங்களுக்கு கடந்த அரசாங்கங்களின் செயற்பாடுகளே காரணம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து  அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவிக்கையில் ”முன்னாள் அரசாங்கம் பாதாள உலக கும்பலுக்கு பாதுகாப்பு வழங்கியது. அதனாலேயே அவர்கள் அச்சமின்றி செயற்பட்டார்கள். தென்பகுதிகளில் கடந்த அரசாங்கங்கள் அதாவது மகிந்த ராஜபக்ச, ரணில், சஜித், நாமல் போன்றவர்கள் பாதாள உலக கும்பலை உருவாக்கி நாட்டுக்குள் குந்தகம் விளைவித்துவந்தார்கள.

அவர்களுக்கு இடமளித்துவந்தார்கள் அவர்களை பாதுகாத்தார்கள் அதன் விளைவாகவே தற்போது துப்பாக்கிச்சூடு, வாள்வெட்டு அடிதடிகள் போன்ற இடம் பெற்றுக் கொண்டிருக்கிறன.நமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த நிலைமை மாறியது. எமது அரசாங்கம் இவ்வாறான பிரச்சினைகள் எங்கு இடம் பெறுகிறது என்பதை அடையாளங்கண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டநடவடிக்கை எடுத்து வருகிறோம். மகாண சபை தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்பதுடன் 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும் அரசியலமைப்பு தொடர்பாக எம்மிடம் கொள்கை ரீதியாக தீர்மானம் உள்ளது” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment