செவனகல பகுதியில் ஹபுருகலை போதிராஜா குளத்தில் மூழ்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
செவனகல மஹகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மற்றொரு நபருடன் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து செவனகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


