TamilsGuide

வடக்கு, கிழக்கில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, இன்று நண்பகல் 12 மணி வரை குறித்த  நிர்வாக முடக்கல் போராட்டம்  முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல தரப்பினரிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிர்வாக முடக்கலுக்கு சில அரசியல் கட்சிகளும்,பொது அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பல அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கான அழைப்பிற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளை தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, ஒரு சிலரின் தன்னிச்சையான செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அந்தக் கிளை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை யாழ் நகரம் இவ்வாறு காட்சியளித்திருந்தது.
 

Leave a comment

Comment