TamilsGuide

ஹர்த்தால் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட புதிய தகவல்

ஹர்த்தால் போராட்டம் தொடர்பில் முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று காலை நேரம் மட்டும் ஹர்த்தால் என நடைபெறும் என தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக  ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஹர்த்தாலை வெற்றி பெற வைக்க எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு உள்ளுராட்சி சபைகளது தலைவர்கள் கடுமையாக பாடுபட்டுவருகின்றனர்.

அதிலும் கடை கடையாக ஆதரவு கோரிவர மறுபுறம் யாழ்.மாநகரசபை முதல்வரோ கௌரவம் பார்க்காமல் வர்த்தக சங்கத்திற்கு நேரில் சென்று ஆதரவு கோரியுள்ளார்.

இதனிடையே ஹர்த்தால் காரணமாக வழமையாக திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் சந்திப்பு  இடம்பெறமாட்டாதென சில தவிசாளர்கள் அறிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment