படப்பிடிப்பின் நடுவில் தனி அறையில் எதோ எழுதி கொண்டு இருந்தார் வள்ளல் எம்ஜிஆர்...
துணிந்து அந்த அறையில் நுழைந்த அந்த நடிகை
என்ன எழுதி கொண்டு
என்று கேட்டு எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார்....
பட குழுவினர் பதற தலைவர் வாம்மா உங்கள் சம்பந்த பட்ட காட்சிகள் எடுத்து முடியட்டும்...
நான் வரேன்..... இப்போ
முக்கிய வேலையில் என்கிறார்....
அது என்ன அப்படி வேலை என்று கேட்க என் ரசிகர்கள் எனக்கு எழுதிய கடிதங்களுக்கு பதில் எழுதி அனுப்பவேன்....
இது என் வழக்கம்....
என்ன சார் இப்படி நீங்கள் ஒரு உதவியாளர் வைத்து கொண்டு நீங்கள் சொல்ல விரும்பும் பதிலை அவர்கள் இடம் சொல்ல அவர்கள் அதை எழுதி அனுப்பினால் உங்கள் சிரமம் குறையுமே என்று கேட்டார் அந்த நடிகை....
தலைவர் சற்றும் யோசிக்காமல் அவங்க நானே பதில் தருவேன் என்று நம்பி அவர்கள் கைப்பட எழுதிய கடிதங்களுக்கு வேறு யாரோ எழுதி அதை அனுப்பினால் அது மரியாதை இல்லை...
என் கைஎழுத்தில் எழுதி அனுப்பினால் எம்ஜிஆர் என்னை மதித்து அவரே தன் கைப்பட கடிதம் அனுப்பி உள்ளார் என்று அவர்கள் அதை மற்றவர்கள் இடம் காட்டி மகிழ்ச்சி பெரும் இன்பம் சொல்ல முடியாத நிறைவை தரும் இல்லையா என்று பதில் சொல்ல....
திகைத்து போனார் அந்த நடிகை..... அண்ணா ஷாட் ரெடி என்று குரல் வர வாங்க போலாம் என்கிறார் வள்ளல்.... உடனே என்ன ஒரு அதிசியபிறவி என்று எண்ணி அவரின் பின்னே
நடந்தார் வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள்...
அப்போ எடுக்க பட்ட காட்சி
படத்தில் எடுக்கப்பட்ட காட்சி தலைவர் நிர்மலா அவர்கள் கையில் ஒரு வளையல் போட்டு
அதற்கு பின் அவர்கள் சொல்லுவார் வெண்ணிற ஆடை நிர்மலா....
அளவு சரியா இருக்கே என்று.....
நான் யாரையும் எப்போவும் சரியா அளவு எடுப்பேன் என்பார்....
வாழ்க தலைவர் புகழ்
உங்களில் ஒருவன் நெல்லை மணி.....
இப்போ ஒரு நடிகன் தன் ரசிகர்களுக்கு ஒரு கடிதம் ஒரு வாட்ஸ் ஆப் ஒரு தகவல்..... நோ.. நோ...
வள்ளல் எம்ஜிஆர் என்றும் வாழ்கிறார் வாழ்வார்...
நன்றி தொடரும்....


