TamilsGuide

விமர்சனம் நன்றாக இருந்தால் படத்தை பார்க்க வாங்க! இல்லன்னா வராதீங்க - பரதா பட குறித்து அனுபமா

அனுபமா பரமேஸ்வரன் அடுத்ததாக பரதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் ப்ரீ ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி அண்மையில் நடைப்பெற்றது. இப்படத்தை பிரவீன் கண்ட்ரேகுலா இயக்கியுள்ளார்.

ப்ரவீன் இதற்கு முன் சினிமா பண்டி மற்றும் சுபம் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பரதா திரைப்படம் தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பரதா கட்டாயமாக அணியும் வழக்கத்தை வைத்திருக்கும் கிராமத்தில் இருந்து அனுபமா வருகிறார், அவர் ஒரு பயணத்தில் மற்ற பெண்களை மற்றும் உலகை புரிந்துக் கொள்ளும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அனுபமா " எங்களிடம் விமர்சகர்களுக்கு நல்ல விமர்சனம் எழுத சொல்லி கொடுக்க பணம் இல்லை. இப்படத்தின் மீது வெளிவரும் விமர்சனங்கள் அனைத்தும் மக்களின் இயற்கை வெளிபாடாக தான் இருக்கும். விமர்சங்கள் நன்றாக இருந்தால் படத்தை திரையரங்கில் காண வாருங்கள் இல்லையெனில் இப்படத்தை நீங்கள் பார்க்க வேண்டாம்" என கூறியுள்ளார்.

படத்தில் சங்கீதா க்ரிஷ் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை ஆனந்த மீடியா நிறுவனம் தயாரிக்க கோபி சுந்தர் இசையை மேற்கொண்டுள்ளார்.
 

Leave a comment

Comment