TamilsGuide

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளித்தனர்.

குறித்த கப்பல் அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று (16) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலானது 127.6 மீட்டர் நீளம் கொண்டதுடன் குறித்த கப்பலின் தளபதியாக A.J.OCHS செயற்படுகின்றார்.

‘USS செண்டா பார்பரா’ கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அதன் குழுவினர் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளதுடன் குறித்த கப்பல் எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment