TamilsGuide

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம் (கேரளா) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை நேற்று (16) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது, தற்போது வெளியுறவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வரும் சஷி தரூரின் கருத்துக்கள் மற்றும் அரசியல் அனுபவங்கள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது எனவும், மேலும் அவரது புகழ்பெற்ற இலக்கியப் பொக்கிஷமான “நமது வாழும் அரசியலமைப்பு” (Our Living Constitution) இன் கையொப்பமிடப்பட்ட பிரதியை பெறுவது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், சிறந்த அரசியல்வாதி, சிந்தனையாளர், எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களில் விளங்கும் சஷி தரூரின் பணி எப்போதும் ஊக்கமளிப்பதாகும் எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment