TamilsGuide

 ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள்அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (16) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சென்னல்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும், மலையடிக்கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், காரைதீவு 06 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேக நபர் ஒருவரையுமே இவ்வாறு கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கைதான சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 5 கிராம் 10 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 50 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், மற்றைய சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், பெண் சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 950 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment