TamilsGuide

பொலிஸ் மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கத்திற்கு இதுவரை 2000முறைப்பாடுகள்

குற்றங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் உடனடியாக அறிவிக்க, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிமுகப்படுத்திய புதிய whatsapp எண்ணுக்கு இதுவரை 2,000க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த புகார்கள் மீதான விசாரணைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறுஞ்செய்திகள், காணொளிகள் மற்றும் புகைப்படங்களை நேரடியாக பொலிஸ் மா அதிபருக்கு முறையிடுவதற்காக 071 859 88 88 என்ற வட்ஸ்அப் எண் கடந்த 13 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment